அதேபோல், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 3 வது முறையாக அஜித்துடன் இணைந்து ஹெச்.வினோத் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த லோகேஷ். சினிமாவில் என் நலம்விரும்பிகளில் வினோத்தும் ஒருவர். அவர் எனக்கு சகோதரர் மாதிரி. இருவரும் அடுத்தடுத்த படங்களின் மூலம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவர் சதுரங்க வேட்டை படம் எடுத்த போது, நான் மா நகரம், பின், அவர் தீரன் படத்திற்கு கார்த்தியைச் சந்தித்தார் , நானும் கைதிக்காக அவரைச் சந்தித்தேன். இதையடுத்து நான் மாஸ்டரில் பிஸியானேன், அவர் வலிமையில் பிஸியாகிவிட்டார். இருவரும் அடுத்து விஜய் 67 பட ஷீட்டிங்கிலும், அஜித் 61 பட ஷூட்டிங்கில் சந்திக்க வாய்ப்புண்டு. அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் தருவார் எனத் தெரிவித்துள்ளார்.