லோகேஷுக்காக வெயிட் பண்ணும் பிரபாஸ்… கொக்கி போடும் தயாரிப்பு நிறுவனம்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (08:11 IST)
இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன்பே லோகேஷ்க்கு ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக கொடுத்துள்ளது. அந்த படத்தை பிரபாஸ் நடிப்பில் உருவாக்க வேண்டும் என அந்நிறுவனம் ஆசைப்படுவதாக தெரிகிறது.

இப்போது லோகேஷ், பிரபாஸ் இருவருமே பிஸியாக இருப்பதால் இந்த படம் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படம் பற்றி தயாரிப்பு நிறுவனத்திடம் பேசியுள்ள பிரபாஸ் “லோகேஷ் எப்போது இந்த படத்துக்கு சம்மதம் சொன்னாலும் தானும் தயாராக இருப்பதாக” கூறியுள்ளாராம். லோகேஷ்க்காக எப்போது வேண்டுமானாலூ தேதிகள் கொடுக்க பேன் இந்தியன் ஹீரோவான பிரபாஸ் தயாராக இருப்பது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்