கமல் சாருக்கு மேக்கப் போட்ட முதல் இயக்குனர் நான்! – விக்ரம் குறித்து லோகேஷ் கனகராஜ்!

செவ்வாய், 24 மே 2022 (14:08 IST)
விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு முதன்முதலாக தான் மேக்கப் போட்டு விட்டதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ள நிலையில் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ் “விக்ரம் ஷூட்டிங்கின்போது நடிகர் கமல்ஹாசனின் மேக்கப் மேனாக 32 நாட்கள் இருந்தேன். முகத்தில் ரத்தக்கறை உள்ளது போன்ற லுக் வேண்டும் என்பதால் நானே மேக்கப் போட்டுவிடவா என அவரிடம் கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். கமல் சாருக்கு மேக்கப் போட்டுவிட்ட முதல் இயக்குனர் நான் தான்” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்