ஜெயிலர் 2 படத்துக்காக நெல்சன் போட்ட கண்டீஷன்… சம்மதிக்குமா சன் பிக்சர்ஸ்?

vinoth

திங்கள், 9 டிசம்பர் 2024 (08:56 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்துக்கான ப்ரமோஷன் காட்சிக்கான ஷூட்டிங் நடந்துள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டி டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் 2 பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்தை எடுத்து முடிக்க நெல்சன் 13 மாதகாலம் அவகாசம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தில் ரஜினியை வைத்து நிறையக் காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாலும், படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதாலும் இந்த நேரத்தைக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்