ரசிகர்களை எச்சரிக்கை செய்த முன்னணி நடிகை !

செவ்வாய், 18 மே 2021 (16:02 IST)
கொரோனா தொற்று யாரையும் பாதிக்கலாம் என்று முன்னணி நடிகை ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கையூட்டும் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தக் கொரொனா பணக்காரன், ஏழை, என எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தன் மனைவியை இழந்துவாடும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்போது அதிக தைரியமுடன் இருக்க வேண்டுமென அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்