திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னணி நடிகை

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (23:19 IST)
தமிழ் சினிமாவில்  பூ. சென்னையில் ஒருநாள், உத்தமவில்லன், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. இதனால் கேரளாவில் பூரம் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரொனா இரண்டாம் அலை பரவி வருவதால்   ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி கேரளாவில் பூரம் திருவிழாவை கேரளாவில் கொண்டாட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

 இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பூரம் திருவிழாவை தடை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் கும்பமேளாவில் கலந்துகொண்ட 100பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட தகவலையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்