"ஓ மணப்பெண்ணே" படத்தின் Lazy சாங் வீடியோ இதோ !

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (09:31 IST)
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவைக் கவனிக்க வைத்த திரைப்படம் பெல்லி சூப்புலு . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உடனே அதன் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கினார்.
 
தன்னுடைய தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற பெயரில் படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின்னர் அதே படத்தைதான் ஓ மணப்பெண்ணே என்ற பெயர் மாற்றி ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் படம் உருவாக்கி வருகிறார்.
 
இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருத்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் "LAZY SONG" யூடியூபில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. சோம்பேறியாக ஹாரிஸ் கல்யாணின் நடிப்பு எதார்த்தமாக உள்ளது. இதோ அந்த வீடியோ...!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்