சிரிக்க, அழ, நடனம் ஆட என்னால் முடியாது

Webdunia
சனி, 7 மே 2016 (15:34 IST)
ஆடுகளம் தாப்ஸியின் ஆட்டம் தமிழில் நிறுத்தத்துக்கு வந்துள்ளது. இன்றைய தேதியில் ஒரு படத்தில்கூட அவர் இல்லை. ஏன்...?


 
 
தாப்ஸிக்கு இந்திதான் டார்கெட். அவர் மனம் போல் இப்போதுதான் இந்திப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தக்க வைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இசை ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளார். 
 
தமிழில் ஏன் நடிப்பதில்லை என்று கேட்டால் சும்மா திரையில் வந்து சிரிக்க, அழ, நடனமாட எனக்கு விருப்பம் இல்லை. வெரைட்டியான வேடங்களில் நடிக்கவே விருப்பம் என்கிறார்.
 
இந்தியில் நீங்க அப்படியென்ன வெரைட்டி ரோலில் நடிக்கிறீங்கன்னு பார்க்கத்தானே போறோம். 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்