நிதிஷ்குமார் முதல்வராக கூடாது: காய் நகர்த்தும் லாலு பிரசாத் யாதவ்..!

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (18:02 IST)
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பாஜகவுடன் மீண்டும் இணைந்தால் அவர் முதல்வராக கூடாது என்று லாலு பிரசாத் யாதவ் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 
 
பீகாரில் காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் இதற்கு உதவி செய்தால்  துணை முதல்வர் பதவி ஒரு சிலருக்கு தயாராக இருப்பதாகவும் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 
 
தற்போது நிதீஷ் குமார் தலைமையில்  காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 
 
நிதிஷ்குமார் ஒருவேளை அவ்வாறு செய்தால் காங்கிரஸ் இடதுசாரிகள், ஜேஆர்டி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை லாலு பிரசாத் யாதவ் வைத்து உள்ளார்.  
 
இந்த கூட்டணிக்கு தற்போது 114 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 122 எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். இதனால் ஒரு சில அமைப்புகளிடம் பேரம் பேசி வருவதாகவும் அந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்