பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா... அவரே வெளியிட்ட புகைப்படம்!

புதன், 21 ஜூலை 2021 (15:13 IST)
நடிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துவிட்டது. ஆகாஷ், ஆனந்தராஜன், பீட்டர் பால் என மூன்று பேரை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு குறிப்பிட்ட காலங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். 
 
வனிதா திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்து செய்வதும் தீபாவளி, பொங்கல் போன்று ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒருவர் என ஆளை மாற்றிக்கொண்டே போகிறார். அந்தவகையில் தற்போது பிரபல காமெடிய நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டுள்ளார். 
 
திருமண கோலத்தில் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் 4வது திருமணம் ஆகிடுச்சா...? சிக்குனாண்டா சேகர் என பவர் ஸ்டாரை ஒட்டு ஓட்டுன்னு ஒட்டித்தள்ளியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போன்று பரவி வர இது குறித்த விளக்கம் வனிதா எதுவும் கூறவில்லை. எனினும் ஏதேனும் படத்தின் ஷூடங்காக இருக்கும் என பேசப்படுகிறது. ப்ரமோஷனுக்காகவே அம்மணி இந்த புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருப்பார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்