ஐபிஎல் இறுதிப் போட்டியில் அமீர்கான் பட ட்ரெய்லர்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (09:56 IST)
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் அமீர்கானின் புதிய படத்தின் ட்ரெய்லர் அதில் வெளியாக உள்ளது.

ஹாலிவுட்டில் கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனம் பெற்ற படம் ஃபாரஸ்ட் கம்ப் (Forest Gump). இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். 27 ஆண்டுகள் கழித்து இந்த படத்தி இந்தி நடிகர் அமீர்கான் இந்தியில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு லால் சிங் சத்தா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கரீனா கபூர், நாகசைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஷாரூக்கான் ஒரு கெஸ்ட் ரோலும் செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியின் இடைவெளியின்போது வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்