லால் சலாம் ஷூட்டிங்… ரஜினிகாந்தோடு முதல் முறையாக இணையும் நகைச்சுவை நடிகர்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (07:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் ரஜினி நடிக்கும் காட்சிகளை மும்பையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முதல் முறையாக ரஜினிகாந்தோடு, நடிகர் தம்பி ராமையா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்