விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் அதுவும் அடுத்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து இப்படம் வருகிற ஏப்ரலில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளது. அதன்படி முதல் வேலையாக "குட்டி கத" என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் கம்போஸ் செய்துள்ள இப்பாடலை யார் பாடியிருக்கிறார்... யார் லிரிக் எழுதியிருக்கிறார் என்ற எந்த தகவலும் அறிவிக்காமல் சர்ப்ரைஸாக வைத்திருந்தனர் படக்குழு.
இதனை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருந்த வேளையில் சற்றுமுன் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் அழகிய புகைப்படமொன்றை பதிவிட்டு தளபதி விஜய் தன் குரலிலே குட்டி கதை சொல்லப்போகிறார் என்பதை தெரிவித்து இப்பாடலை விஜய் பாடியுள்ளதை உறுதி செய்துள்ளார். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.
We’re back baby!
Thalapathy @actorvijay sir, the Masster himself lends his voice to tell you guys a kutti kathai!