பா ரஞ்சித் தயாரித்த ‘குதிரைவால்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (20:41 IST)
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த குதிரை வால் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் ஒன்றாக கடந்த மாதம் குதிரைவால் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மனோஜ் லியோனல் ஜோன்ஸ் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கினர். இந்த திரைப்படத்தை மேஜிக்கல் ரியலிசம் எனும் வகையில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். அதனால் படம் பார்க்க சென்ற பல ரசிகர்களுக்குப் படம் புரியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் திரையரங்குகளில் ரிலீஸாகி ஒரு மாதம் கழித்து தற்போது இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளைமுதல் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்