சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேர் பத்தாது, 50 பேர் வேண்டும்: குஷ்பு வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (19:54 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளில் உள் அரங்குகளில் மட்டுமே நடைபெற வேண்டுமென்றும் படப்பிடிப்பில் கலந்து கொள்வோர் அனைவரும் மாஸ்க் அணிந்து சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே அதிகபட்சமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டது
 
இந்த நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு 20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் என ஒரு சின்னத் திரை படப்பிடிப்பில் டெக்னீஷியன்கள் மட்டுமே 35 பேர் இருப்பார்கள் என்றும் அதன் பின்னர் நட்சத்திரங்களை சேர்த்தால் குறைந்தது 50 பேர்கள் இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் எனவே தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இதுகுறித்து விரைவில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணியுடன் இணைந்து தமிழக செய்தித்துறை அமைச்சரை சந்திக்க குஷ்பு சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. குஷ்புவின் வேண்டுகோளை ஏற்று சின்னத்திரை படப்பிடிப்புக்கு 50 பேர்களை தமிழக அரசு அனுமதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்