காத்து வாக்குல ரெண்டு காதல்…. இதுவும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ஆகிடுமோ?

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:46 IST)
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இரண்டாம் பாதி முழுவதும் இழுவையாக இருப்பதாகவும், காதல் காட்சிகளோ நகைச்சுவை காட்சிகளோ ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட வில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகி விடுமோ என்று சமூகவலைதளங்களில் ட்ரோல்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்