பாரில் ஏற்பட்ட தகராறு.. ஆள்கடத்தல்! லட்சுமி மேனன் தலைமறைவு?

Prasanth K

புதன், 27 ஆகஸ்ட் 2025 (11:35 IST)

மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியரை கடத்திய வழக்கில் லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வந்தவர் லட்சுமி மேனன். சமீபத்தில் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மதுபான பார் ஒன்றுக்கு சென்றபோது அங்கு ஐடி ஊழியர் ஒருவருடன் சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த சண்டையில் ஐடி ஊழியரை தாக்கியதாகவும், கடத்தியதாகவும் புகார் செய்யப்பட்ட வழக்கில் மிதுன், அனீஷ், சோனா மோல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் லட்சுமி மேனனுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில் அவரை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்