ரம்ஜான் விருந்தாக வெளிவரும் விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (11:39 IST)
விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த சூப்பர் த்ரில் திரைப்படமான 'கொலைகாரன்' திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்ததால் கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு ஒரு த்ரில் படம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தொடர்ச்சியாக சூர்யாவின் 'என்.ஜி.கே' உள்பட முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்கள் மே மாதம் ரிலீஸ் ஆவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மே மாதம் மட்டும் சுமார் 18 படங்கள் அதாவது இரண்டு நாட்களுக்கு ஒரு படம் வீதம் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால் 'கொலைகாரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு சென்றுள்ளது
 
சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் 'கொலைகாரன்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி ரம்ஜான் விருந்தாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கியுள்ளார். சைமன் கிங் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்