3டியில் வெளியாகும் கிச்சா சுதீப்பின் அடுத்த படம்

வியாழன், 9 டிசம்பர் 2021 (18:49 IST)
தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப் என்பதும் இவர் நடித்துவரும் திரைப்படம் ஒன்று 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கிச்சா சுதீப் நடித்த பிரம்மாண்டமான திரைப்படம் ’விக்ரந்த் ரோனா’. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
 
இந்த படம் மிக பிரம்மாண்டமான செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படம் தென்னிந்திய திரை உலகிற்கே ஒரு முன்னுதாரணமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் திரையரங்குகளில் ரசிகர்கள் பிரம்மாண்டமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்