வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு ஹீரோக்கள்!

புதன், 8 செப்டம்பர் 2021 (09:34 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் கிச்சா சுதீப் நடிக்க உள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் வேலைகளை முடித்துவிட்டு பின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த படமாக இப்போது கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக சொல்லப் படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்களாக அரவிந்த் சுவாமி மற்றும் பிரபுதேவா ஆகியோரும் நடிக்க உள்ளார்களாம். இந்த படத்துக்கு யுவன் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் இசைப் பணியை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்