KH234 கமல் – மணிரத்னம் கூட்டணி! – போஸ்டரில் உள்ள ரகசிய வார்த்தைகள் என்ன தெரியுமா?

திங்கள், 6 நவம்பர் 2023 (11:17 IST)
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள KH234 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.



தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணி ரத்னமும் இணையும் கமல்ஹாசனின் 234வது படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இவர்கள் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நாயகன் திரைப்படம் இன்றும் கமலின் க்ளாசிக் படங்களில் ஒன்றாக புகழப்படுகிறது.

இந்நிலையில் 30 ஆண்டுகள் கழித்து இணையும் இந்த கூட்டணி எப்படிப்பட்ட படத்தை தரப்போகிறது என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கமல்ஹாசன் துணியால் முகத்தை மூடி கையில் கோல் ஏந்தியபடி நிற்பதுபோல காட்சி உள்ளது. இந்த படம் வரலாற்று கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போஸ்டரில் கமல்ஹாசன் பின்னணியில் சில தமிழ் வார்த்தைகள் மிரர் இமேஜாக காட்டப்பட்டுள்ளது. அது மகாகவி பாரதியாரின் கவிதைகளில் உள்ள வரியாகும். காலனுக்கு உரைத்த என்ற அந்த கவிதையின் வரிகளானது..



காலா உனைநான் சிறு புல்லென மதிக்கிறேன்  என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்  அட(காலா)

வேலாயுத விருதினை மனதிற்  பதிக்கிறேன் நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை  யெண்ணித் துதிக்கிறேன் ஆதி

மூலா வென்றுாகதறிய யானையைக் காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே ? அட (காலா)

ஆலாலமுண்டவனடி சரணென்றமார்க்கண்ன்  தன தாவி கவரப்போய் நீ பட்டபாட்டினை யறிகுவேன்  இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல் உனைவிதிக்கிறேன் ஹரி நாராயண னாநின் முன்னே உதிக்கிறேன் அட(காலா)

இந்த வரிகளை பாரதியார் காலன் (எமனை) கண்டு தான் அஞ்சாத தனத்தை காட்டுவதற்காக பாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edit by Prasanth.K
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்