கே.ஜி.எஃப் பட நடிகர் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (23:10 IST)
கே.ஜி.எஃப் பட நடிகர் விபத்தில் சிக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு  கொண்டு சென்றது இயக்குனர் பிரஷாந்த் நீல்ஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், வசூலிலும் வாரிக் குடித்துள்ளது.

இப்படத்தில் நடித்த   நடிகர் அவினாஷ் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில், இன்று அவர் பெங்களூரில் உள்ள ஒரு ஜிம்மிற்கு காலையில் காரில் சென்ற போது, ஒரு கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கினார். இருப்பினும் காயமின்றி உயிர் தப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்