கேஜிஎப் நடிகர் வீட்டில் நடந்த விஷேஷம் - வாழ்த்து மழையில் யாஷ்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (15:04 IST)
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். 
இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகர் யாஷ்  புதிய வீட்டின் புதுமனை புகுவிழா கோலாகலமாக பூஜையுடன்  நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

நடிகர் யாஷ் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை மற்றும் ஆயுஷ் என்ற மகன் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்