கேஜிஎப் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:49 IST)
கேஜி எப் 2 படத்தின் டீசர் 20 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்கள் இடையே அந்த படத்துக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் சாதனை படைத்தது.

இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு அதிகமாக உள்ள நிலையில் சேட்டிலைட் உரிமையை மொத்தமாக ஜி நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்கு சேர்த்து மிகப்பெரிய தொகைக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்