நாளை சஞ்சய் தத் பிறந்தநாள்… கேஜிஎப் 2 படக்குழு வெளியிடும் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

புதன், 28 ஜூலை 2021 (17:44 IST)
நாளை சஞ்சய் தத் பிறந்தநாளில் கேஜிஎப் 2 வின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

இந்த படம் கொரோனா பரவல் இல்லை என்றால் இந்த மாதம் 16 ஆம் தேதியே ரிலீஸ் ஆகி இருக்கும். ஆனால் இப்போது அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. நாளை இந்த படத்தின் வில்லன் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் படக்குழு கேஜிஎப் 2 வின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்