மூன்று மாதங்களில் மூன்று படங்கள்… அருண் விஜய்யின் செம்ம ரிலீஸ் பிளான்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (10:22 IST)
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தடுத்து ஒரு மாத இடைவெளியில் வெளியாக உள்ளன.

தடம் படத்தின் வெற்றியை அடுத்து அருண் விஜய் நடிக்கும் படங்களின் மீதான கவனம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அவரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அருண் விஜய் கௌரவ வேடத்தில் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

இதையடுத்து நீண்ட நாட்களாக அவர் நடிப்பில் ரிலீஸூக்கு காத்திருக்கும் பார்டர் திரைப்படம் மே 20 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. பின்னர் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள யானை திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்