1200 கோடி வசூல்… இந்திய அளவில் மூன்றாவது படம்… KGF 2 படைத்த சாதனை!

Webdunia
வியாழன், 19 மே 2022 (11:28 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் இரண்டு பாகங்களும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பிறகான ரிலீஸில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் வெளியாகி இதுவரையில் திரையரங்குகள் மூலமாக சுமார் 1200  கோடி ரூபாக்கும் மேல் கேஜிஎப் 2 வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி 2, டங்கல் ஆகிய படங்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்த படத்தின் வசூல் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்