ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள ன சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
இதற்கிடையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்ற நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.