கொரோனாவில் இருந்து மீண்ட கீர்த்தி சுரேஷ்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (14:56 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதாக சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கொரோனா மூன்றாம் அலையால் தினமும் இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த மூன்றாம் அலையில் திரை உலக பிரபலங்கள் சிலர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. ‘

இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த 11 ஆம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் லேசான பாதிப்பு என்பதால் தேவையான அளவு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும், தனது செல்பி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்