ஒரே படத்தில் 2 கோடி சம்பளம் கேட்கும் நடிகை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:42 IST)
உப்பேன்னா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி ஷெட்டி இப்போது இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்.

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் உப்பேன்னா படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளையடித்த கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

உப்பேன்னாவின் பிரம்மாண்ட வெற்றியால் அவருக்கு வரிசையாக படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. இதனால் தனது சம்பளத்தை 2 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்