கீர்த்தி பாண்டியனின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:25 IST)
கீர்த்தி பாண்டியனின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்!
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் உருவாக இருப்பதாகவும் அப்பா-மகள் பாச பிணைப்பு கொண்ட இந்த கதையில் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் அப்பா மகளாக நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்தி வெளியானது 
 
இந்த படத்தை ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரன்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய கோகுல் இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அன்பிற்கினியாள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அருண் பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளத்தை போலவே தமிழிலும் சூப்பர் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஜாவித் ரியாஸ் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்