கலவையான விமர்சனம்… அரண்மனையின் வசூல் மழைக்கு நடுவே தாக்குப்பிடிக்குமா கவினின் ‘ஸ்டார்’?.. மூன்று நாள் வசூல் விவரம்!

vinoth

செவ்வாய், 14 மே 2024 (07:41 IST)
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம்  வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

அதனால் இந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் நன்றாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் வசூல் சுமார் 3 கோடி ரூபாய் வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன.

அடுத்த நாள் சனிக்கிழமையில் 4 கோடி ரூபாயை நெருங்கி வசூல் செய்ததாகவும், ஞாயிற்றுக் கிழமையும் அதே அளவுக்கு வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முதல் வார இறுதி நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அரண்மனை 4 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருவதால் ஸ்டார் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்