ஸ்டார் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்… கலவையான விமர்சனங்கள் வந்த போதும் முன்னேற்றம்!

vinoth

ஞாயிறு, 12 மே 2024 (17:04 IST)
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

அதனால் இந்த படத்திற்கு ஓப்பனிங் வசூல் நன்றாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் வசூல் சுமார் 3 கோடி ரூபாய் வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன.

ஆனாலும் இரண்டாவது நாளான சனிக்கிழமையில் இந்த படம் முதல் நாளை சுமார் 70 லட்ச ரூபாய் அதிக வசூலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரண்டு நாட்களில் இந்த படத்தின் வசூல் 7 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்