காட்டுப் பகுதியில் நடந்த கவலை வேண்டாம் படப்பிடிப்பு

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (14:52 IST)
எல்ரெட் குமார் தயாரிப்பில் டிகே இயக்கியிருக்கும் படம், கவலை வேண்டாம். ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப் படத்தின் கதைக்கும், கதைக்களத்துக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.

 
பத்து வருடங்களாக காதலிக்கும் போது இருக்கும் அன்பு, கல்யாணம் ஆனபிறகு எப்படி மாறுகிறது என்பதுதான் கவலை வேண்டாம் படத்தின் கதை.  இந்தக் கதையை காட்டுப் பகுதியில் படமாக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்த 55 நாள்களும் குன்னூரில் அடர்ந்த வனப்பகுதிகளில்தான் நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
அதிலும் காஜல் அகர்வால் வசதியே இல்லாத இடத்தில் முகம் சுளிக்காமல் நடித்துத் தந்தார் என மொத்த படக்குழுவும் அவரை புகழ்கிறது. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.
அடுத்த கட்டுரையில்