புகைப்படத்தின் ஒரு ஓரமாக காதலரின் முகம்… புகைப்படத்தை உடனே நீக்கிய காத்ரினா கைப்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:26 IST)
பாலிவுட் நடிகை காத்ரினா கைப்பும் நடிகர் விக்கி கௌஷாலும் காதலிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுபவர் விக்கி கௌஷால். இவரும் முன்னணி நடிகையான காத்ரினா கைப்பும் இப்போது காதலிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதை இருவருமே உறுதி செய்யவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை காத்ரினா கைஃப் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு ஓரமாக விக்கி கௌஷாலின் முகம் தெரிவது போல இருந்தது. அதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பவே அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கினார் கேத்ரினா கைஃப். ஆனாலும் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து அந்த புகைப்படத்தை அலசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்