சின்ன வயசுல இருந்தே வொண்டர் வுமன் மேல காதல்!? – ரகசியத்தை வெளியிட்ட ஹ்ரித்திக் ரோஷன்!

வியாழன், 24 டிசம்பர் 2020 (13:23 IST)
ஹாலிவுட் திரைப்படமான வொண்டர் வுமன் ரிலீஸாகியுள்ள நிலையில அதை பார்த்த ஹ்ரித்திக் ரோஷன் வொண்டர் வுமனுடனான தனது உறவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டிசி காமிக்ஸ் கதாப்பாத்திரமான வொண்டர் வுமனை வைத்து வெளியாகியுள்ள திரைப்படம் வொண்டர் வுமர் 1984. டிசி பட வரிசையில் ஏற்கனவே வெளியான வொண்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகமான இதில் வொண்டர் வுமனாக கேல் கெடாட்டே நடித்துள்ளார். முந்தைய பாகத்தை இயக்கிட பேட்டி ஜென்கின்ஸே இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படம் ஒரே சமயத்தில் ஓடிடியிலும், திரையரங்கிலும் வெளியாகியுள்ள நிலையில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வொண்டர் வுமன் படம் வெளியான உடனேயே சென்று பார்த்துள்ளார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். படத்தை பார்த்த அவர் தனது ட்விட்டரில் ”இப்போதுதான் வொண்டர் வுமன் பார்த்தேன். உற்சாகமான அனுபவம். சின்ன வயதிலிருந்தே வொண்டர் வுமன் மீது எனக்கு க்ரஷ் மற்றும் படத்தின் மீது காதல். இது இரண்டும் இன்று ஐமேக்ஸ் அனுபவத்தில் ஒன்று சேர்ந்துள்ளது. இந்த அனுபவத்தை வேறு எதுவும் தராது. வொண்டர் வுமனாக நடித்த கேல் கெடாட்டுக்கு நன்றிகள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இந்திய பெண்களின் நீண்ட கால க்ரஷ்ஷான ஹ்ரித்திக் ரோஷனின் க்ரஷ் வொண்டர் வுமன் மீது இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்