நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ட்விட்டருக்கு வந்த கருணாகரனிடம் ரசிகர்கள் விஜய் குறித்து சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினர். அப்போது, விஜய் ரசிகர்கள் பற்றி உங்களின் கருத்து என்ன எனக் கேட்டதற்கு “யாரையும் பொதுமைப்படுத்திக் கூற முடியாது” என்றார். விஜய்யைப் பிடிக்குமா எனக் கேட்டபோது, “விஜய்யை ரொம்பவே பிடிக்கும்” என்றார்.
உங்களின் கால்ஷீட் கேட்டு விஜய் படத்திலிருந்தும் நயன்தாரா படத்திலிருந்தும் ஒரே நேரத்தில் உங்களை அணுகினால் யாருக்கு சம்மதம் தெரிவிப்பீர்கள் என விஜய் ரசிகர்கள் கேட்டார்கள். அதற்கு கருணாகரன் “விஜய் படத்திற்கு” எனப் பதிலளித்தார். மிக்ஸி, லேப்டாப் எதுவும் உடைத்தீர்களா எனக் கேட்டதற்கு, “இல்லை, ஒருவேளை உடைத்தால் நான்தான் அதை வாங்கவேண்டும் என எனக்குத் தெரியும்” என்றும் கருணாகரன் கூறினார்.