கார்த்தியின் ஜப்பான் பட புரொமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்-1-2 ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
இதையடுத்து, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இது கார்த்தியின் 25 ஆவது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக இமானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தைப் பற்றிய யார் ஜப்பான் என்ற ப்ரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்தி வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் சந்திரசேகர், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Taking a bow with heartfelt gratitude for all the love from you guys