அய்யய்யோ.. அந்த ஹீரோயினா? சூர்யா 44 படத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்?

Prasanth Karthick
வியாழன், 30 மே 2024 (18:40 IST)
சூர்யா 44 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ள நடிகை குறித்து பீதியில் ஆழ்ந்துள்ளது கோலிவுட் வட்டாரம்.



சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வரும் சூழலில் அடுத்து சூர்யா தனது 44வது படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் பீட்சா மூலம் அறிமுகமாகி இறைவி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என சினிமாவில் பல்வேறு புதிய தளங்களில் இயங்கி வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இவர்களது காம்பினேஷன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் படத்தில் தொழில்நுட்ப ரீதியில் பணிபுரிபவர்கள், நடிக்க வாய்ப்புள்ள நடிகர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உறியடி விஜயகுமார், ஜெய்ராம் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவை பொறுத்தவரை ராசியற்ற நடிகையாக பார்க்கப்படுகிறார். இவர் முதன்முதலில் தமிழில் நடித்த ‘முகமூடி’ திரைப்படம் வெற்றிபெறவில்லை. பின்னர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் அவர் நடித்திருந்தாலும் அதில் சில படங்களே ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில் நீண்ட காலம் கழித்து மீண்டும் தமிழில் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இந்நிலையில் சூர்யா படத்தில் அவர் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சினி வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் லைட்டாக புளியை கரைத்துள்ளதாம். எனினும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகத நிலையில் அது குறித்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்