பிரபல நடிகர் படத்தில் இணைந்த கார்த்திக்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (19:38 IST)
நடிகர் பிரஷாந்தின் புதிய படத்தில் நடிகர் கார்த்திக் இணைந்துள்ளது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த அவரது இரண்டாவது மிகப்பெரிய கம்பேக்காக கருதப்படுவது  தற்போது நடித்து வரும் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்  ஆகும்.

இப்படத்தில் ஏற்கனவே நடிகை சிம்ரன் இணைந்துள்ளனர். ,பிரஷாந்தும், சிம்ரனும் சுமார் 20 வருடங்கள் கழித்து இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்களுடன்  நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ள நிலையில் இன்று இப்படத்தில் நடிகர் கார்த்திக் இணைந்துள்ளார். இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் கார்த்திக் தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பதால் இப்படமும் வெற்றி பெரும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்