மீண்டும் 'ஹிட்' பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..எகிறிய எதிர்பார்ப்பு

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (18:22 IST)
நடிகர் கார்த்தி இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி,லட்சுமி மேனன்,. ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் கொம்பன். இப்படத்திற்குப் பிறகு கார்த்தி – முத்தையா மீண்டும் இணைவதாகக் கூறப்பட்ட நிலையில் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராமத்துப் பின்னணியில் இணையும் இப்படத்தை 2டிநிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் கவனம் செலுத்தி வரும் கர்த்தி இப்படத்தை முடித்தபிறகு முத்தையாவுடன் இணைவார் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்