பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

Siva

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (18:16 IST)
'கே.ஜி.எஃப்' மற்றும் 'காந்தாரா' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், தனது புதிய அனிமேஷன் திரைப்படமான 'மகாவதாரம் நரசிம்மா' மூலம் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியுள்ள இந்தப் படம், புராண கதையை மையமாக கொண்டது. இரண்யகசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன் மற்றும் மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் ஆகியோரை சுற்றியே இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த அனிமேஷன் திரைப்படத்தின் காட்சிகள் சர்வதேசத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
 
'மகாவதாரம் நரசிம்மா' படத்தின் ட்ரெய்லர் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு, இதே பாணியில் விஷ்ணுவின் அடுத்தடுத்த அவதாரங்களை மையமாக கொண்டுப் பல படங்களைத் தயாரிக்க ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருவன:
 
ரிலீஸ்மகாவதாரம் பரசுராம் - 2027 ரிலீஸ்
 
மகாவதாரம் ரகுநந்தன் - 2029 ரிலீஸ்
 
மகாவதாரம் தாக்காதேஷ் - 2031 ரிலீஸ்
 
மகாவதாரம் கோகுலானந்தா - 2033 
 
ரிலீஸ்மகாவதாரம் கல்கி -1 - 2035 ரிலீஸ்
 
மகாவதாரம் கல்கி -2 - 2037 ரிலீஸ்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்