காந்தாரா படம் அடைந்த இமாலய வெற்றியை அடுத்து மூன்று ஆண்டுகள் உழைப்பில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா 1 திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகி இதுவரை பதினோரு நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு மேல் மேல் வசூலித்து அசத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு இந்த வாரம் தமிழ்நாட்டில் 4 படங்கள் ரிலீஸாகின்றன. இதில் பைசன் மற்றும் ட்யூட் ஆகிய படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தீபாவளி வாரத்திலும் தமிழ்நாட்டில் காந்தாரா 1 திரைப்படம் 100 தியேட்டர்களுக்கு மேல் ஓட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டில் அந்த படத்துக்குப் பெரியளவில் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.