சிம்புவின் ‘அரசன்’ படத்துக்குத் தெலுங்கில் இதுதான் பெயர்….!

vinoth

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (15:07 IST)
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தின் தலைப்பு ‘அரசன்’ என்று சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த படத்தின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மாநாடு படத்துக்குப் பிறகு பெரிதாக வணிக வெற்றியைப் பெறாத சிம்புவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் இந்த படத்துக்கு ‘சாம்ராஜ்யம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு முன்னோட்ட வீடியோவை ஜூனியர் என் டி ஆர் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்