சர்வதேச விருது விழாவில் கன்னிமாடம்… இயக்குனர் போஸ் வெங்கட் பெருமிதம்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (12:17 IST)
நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமான கன்னிமாடம் திரைப்படம் டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதைப் பெற்றுள்ளது.

கன்னிமாடம் என்ற திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி பரவலான கவனிப்பை சமூகவலைதளங்களில் பெற்றது. ஆனால் நிகழும் விநியோக முறைகளால் அந்த படம் திரையரங்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இப்போது அந்த படத்துக்கு மிகப்பெரிய அங்கிகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

‘கன்னிமாடம்’ திரைப்படம் டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ‘சிறந்த திரைப்படமாக ரசிகர்கள் தேர்வு என்ற பிரிவில் விருதை வென்றுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்