ஆண்ட்ரியா படத்தின் பாடலை வெளியிட்ட கனிமொழி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (18:29 IST)
நடிகை ஆண்ட்ரியா நடித்த அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் இடம் பெற்ற பாடலை திமுக எம்பி கனிமொழி வெளியீட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
வெற்றிமாறன் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற உமாதேவி எழுதிய பாடலை திமுக எம்பி கனிமொழி சற்றுமுன் வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது.  அப்படி வழமைகளை உடைக்கும். உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்