புஷ்பா-2 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்- ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா-1 .
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ. 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. சில மாதங்களாக திரைக்கதை வேலைகள் நடந்து வந்த நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி இப்படத்தின் முதல் கட்ட ஷுட்டிற்காக படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்குச் செல்லவுள்ளதாகவும், அங்கு 15 நாட்கள் ஆக்சன் காட்சிகள் படம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதையடுத்து ரஷியாவில் வெளியாகவுள்ள புஷ்பா 1 பட புரமோஷனில் அல்லு அர்ஜூன் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.