விஜய்க்கு கண்லங்கி நன்றி கூறிய நடிகை கங்கனா ரனாவத்!

செவ்வாய், 23 மார்ச் 2021 (21:49 IST)
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு, இன்று  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இவ்விழாவில் பேசிய நடிகை கங்கனா ரனாவத்... 
 
"தலைவி" திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது.  
 
பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை  தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார்.  
 
என் திறமைக்கு மதிப்பளித்தார் {அவர் இதனை கூறியபோது கண்கலங்கினார்} என்னை முழுதாக இப்படத்திற்காக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் மொத்த இந்தியாவிற்கானது.  அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன் நன்றி என தனது உரையை முடித்தார்.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்