மலேசியாவில் சிவகார்த்திகேயன் ஷூட்டிங் - புதிய அப்டேட்

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (11:48 IST)
மலேசியாவில் நடந்துவந்த சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.


 

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
 
சாலிகிராமம் பிரசாத் லேப்பில் கிராமம் போல செட் அமைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு, ஏப்ரல் 25ஆம் தேதியில் இருந்து மலேசியாவில் ஷூட்டிங் நடந்தது. கிட்டத்தட்ட 25 நாட்களாக அங்கு ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், அங்கு ஷூட்டிங் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.
 
“என் அபிமான மலேசியாவில் படமாக்கியுள்ள என்னுடைய மூன்றாவது படம் இது. வெற்றிகரமாக ஷூட்டிங் முடிந்துவிட்டது. அன்பான தமிழ் மக்களுக்கு நன்றி. எப்போதும் போல் அன்பான உபசரிப்பு” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா. அவர் இயக்கிய ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘தில்லாலங்கடி’ படங்களும் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்டன.
அடுத்த கட்டுரையில்