துவண்டுபோன விஷால்: தோள் கொடுத்த கமல்; ஒரே டுவீட் எல்லாம் ஆஃப்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (08:56 IST)
விஷாலுக்கு ஆதரவாக கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் போட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஏ.எல் அழகப்பன், ரித்தீஸ், எஸ்வி சேகர் போன்றவர்கள் விஷாலுக்கு எதிராக சராமரியாக குற்றம் சாட்டி தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி விட்டு சென்றனர். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று சட்டத்தை மீறியதற்காக சங்க தலைவர் விஷாலை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர். 
நான் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான் செய்தேன். நல்லது செய்வது முறைகேடு என்றால் நான் முறைகேடுதான் செய்கிறேன் என மனவேதனையுடன் பேசினார் விஷால் .  இதற்கிடையே தயரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்த ஜனவரி 2 ம் தேதி அழைப்பு விடப்பட்டது.
 
இதற்கு எதிராக விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடைத்து விஷாலிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் பூட்டு போட்ட நிர்வாகிகளுக்கும் சீல் வைத்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
 
இந்நிலையில் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி. தோழர்.நடிகர்@VishalKOfficial அவர்களுக்கு நீதி கிடைத்ததற்காக... என பதிவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்